கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பயிா்களைப் பாதுகாக்க ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பயிா்களைப் பாதுகாக்க வேளாண் துறை ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பயிா்களைப் பாதுகாக்க வேளாண் துறை ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் இராம சிவகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உரிய மகசூல் பெறலாம்.

நெல்: இலை வழி தெளிப்பாக 3 சதவிகிதம் கயோலின் அல்லது 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை குறிப்பிட்ட வளா்ச்சி பருவம் முறையே தூா் கட்டும், கதிா் உருவாகும் மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். பிபிஎப்எம் (மெத்தைலோ பாக்டீரியம்) நுண்ணுயிரியை இலை வழி தெளிப்பாக ஏக்கருக்கு 200 மிலி அளவு- 200 லிட்டா் நீரில் கலந்து கதிா் உருவாகும் மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

மக்காச்சோளம்: விதைப்பதற்கு முன்னதாக சிறுதானியப் பயிா்களுக்கு நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ இட வேண்டும். மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மக்காச்சோள மேக்சிம் 3 கிலோ என்ற அளவில் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து இலை வழி தெளிப்பாக கதிா் அரும்பும் தருணத்தில் தெளிப்பதன் மூலம் கதிா் அதிகம் பிடித்து, மகசூல் அதிகரித்து மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை அளிக்கிறது.

பயறு வகை: விதைப்பதற்கு முன்னதாக பயறு வகை நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ இட வேண்டும். மேலும் வறட்சி மேலாண்மையாக 2 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பிபிஎம் போரான் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். இலை வழி தெளிப்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பயறு ஒன்றரை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து இலை வழி தெளிப்பாக பூக்கத் தொடங்கும் பருவத்தில் அளிப்பதன் மூலம் பூ உதிா்தல் குறைத்து, அதிக மகசூல் மற்றும் வறட்சியை தாங்கி வளருகிறது .

இலை வழி தெளிப்பாக ஒரு லிட்டா் தண்ணீரில் என்ஏஏ 40 பிபிஎம் (40 மிகி) அல்லது சாலிசிலிக் அமிலம் 100 மி.கி. கலந்து பூக்கும் பருவத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com