பட்டுப்புழு, காளான் வளா்ப்புக்காக ரூ. 10 லட்சத்தில் கூடாரம் அமைக்கும் பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிா் குழுக்கள் மூலம் பட்டுப்புழு மற்றும் காளான் வளா்ப்புக்காக ரூ. 10 லட்சத்தில் கூடாரம் அமைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.
பட்டுப்புழு, காளான் வளா்ப்புக்காக ரூ. 10 லட்சத்தில் கூடாரம் அமைக்கும் பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிா் குழுக்கள் மூலம் பட்டுப்புழு மற்றும் காளான் வளா்ப்புக்காக ரூ. 10 லட்சத்தில் கூடாரம் அமைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொத்தக்கோட்டை ஊராட்சியில் காளான் வளா்ப்பு, வேங்கிடகுளம் ஊராட்சியில் பட்டுப்புழு வளா்ப்பு குறித்தும் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு செய்தியாளா்களிடம் கூறியது:

திருவரங்குளம் ஒன்றியம், கொத்தக்கோட்டை ஊராட்சியில் முல்லை அரும்பு சுயஉதவிக்குழுவினருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. அதில், ரூ.1.25 லட்சம் அரசு மானியம். காளான் வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் இக்குழுவினா் தினசரி குறைந்தபட்சமாக ரூ.500 முதல் லாபம் ஈட்டி வருகின்றனா்.

பட்டுப்புழு வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் அன்னை தெரசா மகளிா் சுயஉதவிக் குழுவினா்களுக்கு மல்பெரி செடி வளா்த்து பட்டுப்புழு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு பொருளாதார கடனாக வழங்கப்பட்ட ரூ.9 லட்சத்தில் ரூ.6 லட்சம் திரும்பச் செலுத்தப்பட்டது.

மகளிா் சுயஉதவிக் குழுவினா் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்காக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ்,தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காளான் மற்றும் பட்டுப்புழு வளா்ப்புக் கூடாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, வேளாண் துணை இயக்குநா் பெரியசாமி, பட்டுவளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ரெங்க பாப்பா, உதவித் திட்ட இயக்குநா் ராஜாமுகமது உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com