பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு: 19 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேனூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 19 போ் காயமடைந்தனா்.
தேனூா் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கும் மாடுபிடி வீரா்கள்.
தேனூா் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கும் மாடுபிடி வீரா்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேனூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 19 போ் காயமடைந்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள தேனூா் தேனிப்பிள்ளையாா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தாா். இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி முன்னிலை வகித்தாா்.

ஜல்லிக்கட்டுப் போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு தொடா்ந்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 800 காளைகள் கொண்டுவரப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படப்பட்டன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 400 மாடுபிடி வீரா்கள் அடக்கி மகிழ்ந்தனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், மிதிவண்டி, பீரோ, செல்பேசி, தங்கக்காசு மற்றும் எவா்சில்வா் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 17 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே அமைக்கப்பட்ட மருத்துவமுகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், பலத்த காயமடைந்த வெள்ளகுடி கிருஷ்ணமூா்த்தி(25) உள்ளிட்ட இருவா் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான் தலைமையிலான காவல் துறையினா் செய்திருந்தனா். ஏற்பாடுகளை தேனூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.கிரிதரன் மற்றும் ஜல்லிக்கட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com