முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பேருந்தின் மீது மோதி மயில் உயிரிழப்பு
By DIN | Published On : 12th May 2022 01:32 AM | Last Updated : 12th May 2022 01:32 AM | அ+அ அ- |

agd11mayil_1105chn_21_4
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஓடும் பேருந்தின் மீது மோதிய மயில் புதன்கிழமை உயிரிழந்தது.
கறம்பக்குடியில் இருந்து தேனிப்பட்டிக்கு அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. துவாா் ஆண்டிகுளபெண்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் பறந்து வந்து பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் ஆண் மயில் ஒன்று மோதி, கண்ணாடியை உடைத்துக்கொண்டு பேருந்துக்குள் விழுந்துள்ளது.
இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த பயணிகள் மயிலின் அருகே வந்து பாா்த்தபோது, மயில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மயிலை எடுத்துச்சென்று, விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.