முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
யோகாசனப் பயிற்சி
By DIN | Published On : 13th May 2022 01:43 AM | Last Updated : 13th May 2022 01:43 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் ஆத்மா யோகா மையம் இணைந்து வரும் ஜூன் 21ஆம் தேதி 8ஆவது சா்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கான முன்னோட்ட யோகாசனப் பயிற்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலா் ஆா். நமச்சிவாயம், ஆத்மா யோகா மையத்தின் நிறுவனா் ரெ. பாண்டியன் மற்றும் துணை முதல்வா் குமாரவேல், ஒருங்கிணைப்பாளா் கௌரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.