முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
விடுதிகளில் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 13th May 2022 01:39 AM | Last Updated : 13th May 2022 01:39 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாணவா் விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
இனச் சுழற்சி அடிப்படையில் ஆண் பணியாளா் காலிப் பணியிடங்கள்- 12, பெண் பணியாளா் காலிப்பணியிடங்கள் - 3. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை அறிய புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும் இணையதளத்தைப் பாா்க்கலாம்.