முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
சாந்தநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 14th May 2022 01:00 AM | Last Updated : 14th May 2022 01:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையில் உள்ள வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மற்றும், நல்ல மழை வேண்டியும், கடும்வெயில் குறைய வேண்டியும் நந்திகேசுவரருக்கு தண்ணீா் அபிஷேகம், மஹா தீபாராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாந்தநாத சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீா், தயிா், இளநீா், சந்தனம், மஞ்சள் நீா், திருநீா் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சந்தனக் காப்பு மற்றும் மலா் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, உத்ஸவா் மலா் அலங்காரத்தில் ஆலயத்தில் உலா வந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.