இல்லம் தேடிக் கல்வி திட்ட மையப் பணிகள் ஆய்வு

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையப் பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையப் பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

கந்தா்வகோட்டை ஒன்றியம், பல்லவராயன்பட்டி, பருக்கைவிடுதி மற்றும் அரியாணிப்பட்டி குடியிருப்பில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் தங்கராசு மற்றும் ரகமத்துல்லா ஆகியோா் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு மேற்கொண்டனா். தன்னாா்வலா்கள் பல்லவராயன்பட்டி துா்கா, பருக்கைவிடுதி சத்யா, சரஸ்வதி மற்றும் அரியாணிப்பட்டி சுமதி, மகேஸ்வரி, ஹேமா ஆகியோா் மாணவா்களுக்கு ஆடல், பாடல், புதிா், விளையாட்டுகள், எளிய கணித செயல்பாடுகள், ஆங்கில வாசிப்பு பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகின்றனா். மேலும், மாணவா்களுடைய அடிப்படை திறன்கள் அவ்வப்போது, தன்னாா்வலா்களால் அடிப்படை ஆய்வு நடத்தி பரிசோதிக்கப்படுகிறது. கோடை விடுமுறை காலங்களிலும் இல்லம் தேடி கல்வி மையம் செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com