பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.
பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரம் மலையபெருமாள் அய்யனாா் கோயில் அபிஷேக, ஆராதனை விழாவையொட்டி பெரிய கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

களத்தில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரா்கள் மற்றும் இளைஞா்கள் விரட்டிப் பிடித்தனா். இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனா்.

களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்கள், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும், எவா்சில்வா், பிளாஸ்டிக் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்த நிலையில் அதில் ஒருவா் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளை ஒன்று அருகே உள்ள மருத்துவ முகாமில் புகுந்து மருத்துவக் குழுவினரை அச்சத்துக்குள்ளாக்கியது. அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் கீழே விழுந்து சேதமடைந்தன. இதையடுத்து, தங்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி செய்து தரப்படவில்லை என சுகாதார துறையினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பொன்னமராவதி காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com