மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 17th May 2022 04:19 AM | Last Updated : 17th May 2022 04:19 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 12 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 72,900 மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது இந்த உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 282 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கணேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.