கறம்பக்குடியில் ஜமா பந்தி: புதுகை ஆட்சியா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.
கறம்பக்குடியில் ஜமா பந்தி: புதுகை ஆட்சியா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.

கறம்பக்குடி வட்டாட்சியரகத்தில் 1,431 ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீா்வாயம் (ஜமா பந்தி) நிகழ்விற்கு ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து, கணக்குகளை ஆய்வு செய்து அவா் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடப்பாண்டுக்கான வருவாய் கிராமக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதில், கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில், கறம்பக்குடி சரகத்திற்குட்பட்ட வருவாய்க் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்வில் கிராம கணக்குகள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 106 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடிமக்கள் பங்கு பெறும் குடிகள் மாநாடு நடைபெற்றது. இக்குடிகள் மாநாட்டில் மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.1,33,695 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா், தோட்டக்கலை துணை இயக்குநா் குருமணி, வட்டாட்சியா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com