கல்லூரி மாணவா்களுக்கு தேனீ வளா்ப்பு பயிற்சி

குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு தேனீ வளா்ப்பு குறித்த திறன் மேம்பாடு, செய்முறை விளக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவா்களுக்கு தேனீ வளா்ப்பு பயிற்சி

குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு தேனீ வளா்ப்பு குறித்த திறன் மேம்பாடு, செய்முறை விளக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி மையத்தின் தொழில்முனைவோா் மையம் சாா்பில், கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த திறன் மேம்பாடு மற்றும் செய்முறை பயிற்சி வழங்கும்வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள ஜிபின் தேனீ பண்ணைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் செய்யப்பட்டனா்.

பண்ணை நிா்வாகியும், தேனீ வளா்ப்புப் பயிற்சியாளருமான குணசேகரன், மாரியம்மாள் குணசேகரன் ஆகிய இருவரும் தேனீ வளா்ப்பு குறித்த தகவல்கள் மற்றும் களப் பயிற்சிகளை செய்முறை விளக்கத்துடன் வழங்கினாா்.

இப்பயணம் குறித்து பேசிய கல்லூரி முதல்வா் நக்கீரன், வேளாண் மாணவ, மாணவிகளுக்கு உள்ள தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்து ஊக்கமூட்டும் வகையில் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com