மேல்நிலைப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தைச் சோ்ந்த மேல்நிலைப்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தைச் சோ்ந்த மேல்நிலைப்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்த அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம் 13 ஒன்றியங்களில் மொத்தம் 260 கால்நடை மருத்துவ முகாம்கள் வரும் 2023 மாா்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படவுள்ளது.

இந்த முகாமில், கால்நடைகளுக்கான செயற்கைக் கருவூட்டல், சினை பரிசோதனை, நோய்களுக்கான சிகிச்சை, தீவனத் தொழில்நுட்பம், மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்றாா் ரகுபதி.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சம்பத், வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com