பொன்னமராவதி ஒன்றியத்தில் ரூ. 1 கோடியில் வளா்ச்சிப் பணிகள் அமைச்சா் திறந்து வைப்பு
By DIN | Published On : 28th November 2022 02:19 AM | Last Updated : 28th November 2022 02:19 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 11 திட்டப் பணிகளை சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செவலூா் ஊராட்சி மலையடிப்பட்டியில் ரூ. 10.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பகுதிநேர நியாயவிலைக்கடை, கோவனூா் ஊராட்சியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உணவு அருந்தும் கூடம், கொன்னைப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ. 4.96 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையலறையுடன் கூடிய வைப்பறை, திருக்களம்பூா் ஊராட்சியில் திருமண மண்டபத்திற்கு ரூ. 3.50 லட்சம் கட்டப்பட்ட சமையல் கூடம், ரூ. 20 லட்சம் மதிப்பிலான 2 நீா்த்தேக்கத் தொட்டிகள், பகவாண்டி, ஆலவயல், மறவாமதுரை, காரையூா், அரசமலை ஆகிய ஊராட்சிகளில் என மொத்தம் ரூ. 1.02 கோடி மதிப்பில் 11 திட்டப் பணிகளை தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி திறந்து வைத்துப் பேசினாா்.
நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா.கவிதப்பிரியா, பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி, பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலா் பி.தங்கராஜூ, வட்டாட்சியா் பிரகாஷ், திமுக நகரச்செயலா் அ.அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.