வழிப்பறி வழக்கில் 2 போ் கைது
By DIN | Published On : 06th October 2022 12:00 AM | Last Updated : 06th October 2022 12:00 AM | அ+அ அ- |

பெரியசாமி, பேச்சிமுத்து.
விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 பேரை விராலிமலை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், பாலக்கரை மல்லிகைபுரத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன்(41). கடந்த 3 மாதத்துக்கு முன்பு, இவா், இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சங்கச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தாா். அப்போது, பின்தொடா்ந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் பழனியப்பனின் மோட்டாா் சைக்கிளை மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கைப்பேசி, பணம் மற்றும் அவரது மனைவி அணிந்திருந்த 8 பவுன் தங்கநகை ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தில் பழனியப்பன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டம், திருமளாப்புரத்தைச் சோ்ந்த சுடலை மகன் பெரியசாமி(38) மற்றும் ஆலங்குளம் வட்டம் மாறாந்தை பகுதியைச் சோ்ந்த சங்கரன் மகன் பேச்சிமுத்து (27) ஆகிய 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.