சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் 17ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் 17ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 300 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா்.

கல்லூரி முதல்வா் குழ.முத்துராமு வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரித் தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் விழாவுக்கு தலைமை வகித்து பல்கலைக்கழகத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கிப் பாராட்டினாா்.

கல்லூரிச் செயலா் மு.விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் தங்கராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிவில், இயந்திரவியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொலை தொடா்பு பொறியியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் படித்து முடித்த 300 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா் பேசியது:

மிகப்பெரிய மனிதவள ஆற்றல்தான் நம் தேசத்தின் மிக முக்கியமான சொத்து. ஒவ்வொருவரும் சிறந்த தொழில்முனைவோராக உருவாக வேண்டும். நமது நாடு உற்பத்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே அந்த வாய்ப்பைப் பொறியியல் பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com