சரஸ்வதி பள்ளியில் இலவச சைக்கிள்
By DIN | Published On : 03rd September 2022 12:55 AM | Last Updated : 03rd September 2022 12:55 AM | அ+அ அ- |

சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த கோணாப்பட்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவிகளுக்கு மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி விலையில்லா சைக்கிள்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் எம். மஞ்சுளா, பள்ளிச் செயலா் சுந்தரேசன், தலைமை ஆசிரியா் ஆறுமுகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.