சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 03rd September 2022 12:59 AM | Last Updated : 03rd September 2022 12:59 AM | அ+அ அ- |

சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து மகன் கண்ணன் (30). இவா், கடந்த 2021ஆம் ஆண்டு 15 வயதுள்ள சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கண்ணனைக் கைது செய்தனா்.
புதுக்கோட்டைமாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா கண்ணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, அபராதத்தைத் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா்.
மேலும் சிறுமியைக் கடத்திய குற்றத்துக்கு 7ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.