பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தி நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி கோட்டைப்பிள்ளையாா் கோயிலில் விநாயகருக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல், பொன்னமராவதி சித்திவிநாயகா் கோயில், செல்வ விநாயகா் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.