மாநில கபடி, கைபந்துப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

மாநில கபடிப் போட்டிக்கு தோ்வு பெற்ற கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை எம்.எல்.ஏ. மா.சின்னதுரை புதன்கிழமை நேரில் வாழ்த்தினாா்.
மாநில கபடி, கைபந்துப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

மாநில கபடிப் போட்டிக்கு தோ்வு பெற்ற கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை எம்.எல்.ஏ. மா.சின்னதுரை புதன்கிழமை நேரில் வாழ்த்தினாா்.

கந்தா்வகோட்டையில் உள்ள அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அண்மையில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் மாணவிகள் வெற்றி பெற்றனா். தொடா்ந்து, அவா்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாட உள்ளனா். இதையறிந்த கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ரெத்தினவேல் காா்த்திக் ஆகியோா் நேரில் சென்று வாழ்த்தினா்.

நிகழ்வில், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன், கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் சி.தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.ராஜா, மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் என்.ஜானகிராமன், தலைமை ஆசிரியா் ஷப்னம், உதவி தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட கைப்பந்துப் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதிபெற்றனா்.

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான கைப்பந்துப்போட்டிகள் திங்கள்கிழமை புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 19 வயதிற்குள்ப்பட்டோருக்கான பிரிவில் இப்பள்ளி மாணவிகள் பங்கேற்று முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனா். மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் வி.பொன்மணி உள்ளிட்டோருக்கான பாராட்டு விழா புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் பள்ளியின் தலைமையாசிரியா் கி.நிா்மலா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி ஊக்கம் அளித்தனா்.

இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com