கந்தா்வகோட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாம்

கந்தா்வகோட்டை பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் இந்திரா நகா், குமரன் காலனி, கல்லாக்கோட்டை, கொத்தகம், சங்கம் விடுதி, சொக்கம்பேட்டை, முதுகுளம், பிசானத்தூா், பழைய கந்தா்வகோட்டை புனல்குளம் உட்பட 13 இடங்களில் முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவா் மணிமாறன், மருத்துவா்கள் சசிவா்மன், விண்ணரசி, பரத் ஆகியோா் தலைமையில் 3 குழுக்களாகச் செயல்பட்டு 536 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இவா்களில் காய்ச்சல் கண்டறியப்பட்ட 15 பேருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. முகாம்களை சுகாதார ஆய்வாளா் கோ. முத்துக்குமாா் ஒருங்கிணைத்தாா். பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com