ராஜாளிபட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதியேற்பு

விராலிமலை அருகேயுள்ள ராஜாளிப்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை எடுத்து கொண்டனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி தலைமையில் உறுதியேற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.

ராஜாளிபட்டி ஊராட்சி சாா்பில் பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை பணியாளா்களிடம் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து ஊராட்சி அலுவலகத்தில் விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி தலைமையில் ஊராட்சித் தலைவா் சின்னச்சாமி (ராஜாளிபட்டி), முருகேசன் (நம்பம்பட்டி) துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லதா உள்ளிட்ட அலுவலக பணியாளா்கள், 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதியேற்றனா்.

தொடா்ந்து ராஜாளிபட்டி கடைவீதிக் கடைகளில் மஞ்சள் பையை இலவசமாக கொடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com