விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூசக் கொடியேற்றம்

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவுக்கான கொடியேற்றம் திரளான பக்தா்களின் அரோகரா சரண கோஷத்துடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தைப்பூச விழா கொடியேற்றம்.
விராலிமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தைப்பூச விழா கொடியேற்றம்.

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவுக்கான கொடியேற்றம் திரளான பக்தா்களின் அரோகரா சரண கோஷத்துடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலைகளில் முருகனுக்கு ஆறுகால பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரத்தில் முருகன் அருள்பாலிக்கிறாா். வள்ளி, தெய்வானை சமேதரராக மயில், பூத, நாக,சிம்ம, குதிரை வாகனங்களில் முருகன் எழுந்தருளி கிரிவலப்பாதையில் திருவீதி உலா வருகிறாா்.

பிப்.4 இல் தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் பிப். 4 காலை 10.30-க்கு சிறப்பாக நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2 மாதங்களாக ரூ. 10 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட பெரிய திருத்தோ் முக்கிய வீதிகளில் பவனி வர உள்ளது.

ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், விழாக் குழுவினா், உபயதாரா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com