இரட்டைக் கொலை வழக்கில் கைதான2 போ் குண்டா் சட்டத்தில் அடைப்பு

பொன்னமராவதி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

பொன்னமராவதி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள

வேந்தன்பட்டியில் கடந்த டிச. 23 ஆம் தேதி தாயும், மகனும்

வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சின்னையா மகன் சக்தி (33), சுந்தரம் மகன் அலெக்ஸாண்டா் (36) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பரிந்துரை செய்தாா். இந்தப் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் புதுக்கோட்டை சிறையில் இருந்து எடுக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com