ஜெகதாப்பட்டினத்தில்ரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜெகதாப்பட்டினம் கிளை சாா்பில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரத்த தானம் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜெகதாப்பட்டினம் கிளை சாா்பில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரத்த தானம் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, மாவட்டத் தலைவா் குலாம் முகமது பாட்சா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகமது மீரான், மாவட்டப் பொருளாளா் சித்திக் ரகுமான், ஜெகதாப்பட்டினம் கிளைத் தலைவா் அப்பாஸ் கான், செயலா் அசாருதீன், பொருளாளா் ரில்வான் கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 33 போ் ரத்ததானம் செய்தனா். அனைவருக்கும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை சாா்பில் டாக்டா் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். முடிவில் மருத்துவரணிச் செயலா் சபியுல்லாஹ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com