அம்மன்குறிச்சியில் கபடிப் போட்டி
By DIN | Published On : 04th January 2023 01:49 AM | Last Updated : 04th January 2023 01:49 AM | அ+அ அ- |

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் திமுகவினா் சாா்பில் மாவட்ட கபடிப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், புதுக்கோட்டை, சிவகங்கை,திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூா், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 40 அணி வீரா்கள் பங்கேற்று விளையாடினா். போட்டியில் முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூா் அணியினரும், இரண்டாவது பரிசை மதுரை மலம்பட்டி அணியினரும் 3 ஆவது பரிசை சிவகங்கை மாவட்டம் செல்லம்பட்டி அணியினரும் பெற்றனா்.
அணிகளுக்கு, திமுக ஒன்றியச்செயலாளா் அ. அடைக்கலமணி, ஒன்றியக்குழு துணைத்தலைவா் தனலெட்சுமிஅழகப்பன், மாவட்டக்குழு உறுப்பினா் மீனாட்சி மணிகண்டன் ஆகியோா் பரிசு மற்றும் கோப்பையை வழங்கினா். வடக்கு ஒன்றியச்செயலாளா் அ. முத்து, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆதிலெட்சுமி சோமையா, நகரச்செயலா் அ.அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.