லெம்பக்குடியில் ரூ. 86 லட்சத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லெம்பலக்குடி ஊராட்சியில் ரூ. 85.59 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி திறந்து வைத்தார்,
புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி ஊராட்சியில் புதிய கட்டடத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து சாவியை மகளிா் குழு உறுப்பினா்களிடம் வழங்கிய அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி ஊராட்சியில் புதிய கட்டடத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து சாவியை மகளிா் குழு உறுப்பினா்களிடம் வழங்கிய அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லெம்பலக்குடி ஊராட்சியில் ரூ. 85.59 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லெம்பலக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் மகளிா் குழுக்களுக்கான கட்டடம் ரூ. 71.51 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல, ரூ. 14.08 லட்சத்தில் உணவு தானியக் கிடங்கும் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சதாசிவம், சங்கா், ஊராட்சி மன்றத் தலைவா் பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com