வேங்கைவயல் சம்பவம்: வி.சி.க.வினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

ஆலங்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஆலங்குடியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே கட்சியினா் தெற்கு மாவட்டச் செயலா் சசி.கலைவண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் அசுத்தம் செய்தவா்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இதில், கட்சியின் மண்டலச்செயலா் ஷாஜகான், வடக்கு மாவட்டச்செயலா் பாவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.