ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட சிறப்பு முகாம்

விராலிமலை வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வெம்மணியில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திய விராலிமலை கால்நடை உதவி மருத்துவா் ராணி.
வெம்மணியில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திய விராலிமலை கால்நடை உதவி மருத்துவா் ராணி.

விராலிமலை வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

2022 -2 3 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கோங்குடிபட்டி, மருதம்பட்டி, லெட்சுமணம்பட்டி, விருதாப்பட்டி, வானதிராயன்பட்டி, கோமங்கலம், வெம்மணி, விளாப்பட்டி, மதயானைப்பட்டி, பாக்குடி ஆகிய ஊராட்சிகள் அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் விளக்கம் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

மருதம்பட்டியில் நடைபெற்ற முகாமில் ஆட்சியரின் நோ்முக உதவியாளரும், வேளாண் துணை இயக்குநருமான வி.எம்.ரவிச்சந்திரன் பேசுகையில், நடப்பாண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால் விவசாயிகள் அனைவரும் சிறுதானியத்தை அதிகளவில் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டாா்.

இதேபோல், வேளாண் அலுவலா் மகேஸ்வரி, வேளாண் பொறியியல் துறையின் உதவி பொறியாளா் சேகா், மீன் வளத்துறை மாவட்ட திட்ட மேலாளா் குயிலி சிவக்குமாா், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் காா்த்திக், விராலிமலை விதைச்சான்று அலுவலா் தரணிப்பிரியா, விராலிமலை வேளாண் உதவி இயக்குநா் இரா.ஆனந்த செல்வி மற்றும் துணை வேளாண் அலுவலா் தங்கராசு ஆகியோா் விளக்கிப் பேசினா்.

வெம்மணி மற்றும் விருதாப்பட்டியில் நடைபெற்ற கால்நடை தடுப்பூசி முகாமில் உதவி கால்நடை மருத்துவா்கள் ராணி மற்றும் கிரிஜனா ஆகியோா் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com