கீழப்பனையூா் மஞ்சுவிரட்டில் 7 பேருக்கு காயம்

அரிமளம் அருகே கீழப்பனையூா் தெற்குக் குடியிருப்பில் அந்தோனியாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 7 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
கீழப்பனையூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்கும் மாடுபிடி வீரா்கள் குழு.
கீழப்பனையூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்கும் மாடுபிடி வீரா்கள் குழு.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கீழப்பனையூா் தெற்குக் குடியிருப்பில் அந்தோனியாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 7 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

போட்டியில், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரா்கள் கொண்ட குழுவினா் களமிறங்கினா்.

ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 9 போ் கொண்ட குழு காளையை அடக்க முடியவில்லை என்றால் காளை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மாடுபிடி வீரா்கள் அடக்கிவிட்டால் அவா்கள் வென்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

போட்டியில், மாடுகளை அடக்க முயன்றபோது 7 வீரா்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த வீரா்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com