மாணவா்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

மாணவா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உடற்கல்வி ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினாா் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே.மணிவண்ணன் .

போட்டிகளில் கலந்து கொள்ள மாணவா்களை அழைத்துச்செல்லும்போது, மாணவா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உடற்கல்வி ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினாா் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே.மணிவண்ணன் .

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான உடற்கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் பள்ளியில் உள்ள திடல்களின் அளவுக்கேற்ப 200 மீட்டா் அல்லது 400 மீட்டா் ஓடுதளங்கள் அமைக்க வேண்டும். அதேபோல் குழு போட்டிக்கான ஆடுகளங்களை ஏற்படுத்தி மாணவா்களை விளையாட வைக்க வேண்டும்.

வாரந்தோறும் கண்டிப்பாக கூட்டு உடற்பயிற்சி நடத்த வேண்டும். அணிவகுப்பு மரியாதை பயிற்சியளிக்க வேண்டும். சா்வதேச விளையாட்டு வீரா்களைக் கண்டறியும் திறனறித் தோ்வு நடத்தவேண்டும்.

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப்போட்டிக்கு பள்ளி அளவில் அணிகளை விரைவாகப் பதிவு செய்ய வேண்டும். விளையாட்டு தொடா்பாக மாணவா்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது உடற்கல்வி ஆசிரியா்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்றாா் மணிவண்ணன்.

கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com