லெம்பலக்குடியில் ‘ வருமுன் காப்போம்’ மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்துக்குள்பட்ட லெம்பலக்குடியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
லெம்பலக்குடியில் ‘ வருமுன் காப்போம்’ மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்துக்குள்பட்ட லெம்பலக்குடியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி இந்த முகாமைத் தொடங்கி வைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1.05 லட்சம் பேருக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சென்றடைந்துள்ளதாக அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். சுகாதாரத் துறை துணை இயக்குநா் ச. ராம்கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் அழகு சிதம்பரம், வட்டார வளா்ச்சி அலுவலா் சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com