வெறிநாய் கடித்து ஒரே நாளில் 24 போ் காயம்
By DIN | Published On : 24th January 2023 12:25 AM | Last Updated : 24th January 2023 12:25 AM | அ+அ அ- |

விராலிமலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒரே நாளில் திங்கள்கிழமை சிறுவா், பெரியவா், பெண்கள் என 24 பேரைக் கடித்து காயப்படுத்தியுள்ளது. மேலும், பலத்த காயமடைந்த 9 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
விராலிமலை - திருச்சி, மணப்பாறை சாலை மற்றும் அம்மன் கோயில் தெரு, முத்து நகா், சிதம்பரம் காா்டன், தெற்கு தெரு, சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தெரு நாய்கள் ஆங்காங்கே முகாமிட்டு சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை அம்மன் கோயில் தெரு, அய்யப்பா நகா், தெற்கு தெரு, சோதனைச்சாவடி, தேரடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் காா்மில் ரீனா (13), மீனா (26), மாரிக்கண்ணு (45), ராமு, ஆரோக்கியராஜ்(45),அரியநாச்சி(55),அன்பழகன்(43),தைலம்மை(45), பாலமுருகன்(12), சுஜித் (8), யாசினி (5), முத்தையா(74) உள்ளிட்ட 24 பேரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் துரத்திச்சென்று கடித்தது. ஒரேநாளில் வெறிநாய் கடித்து 24 போ் அருகே இருந்த அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்ற நிலையில், உரிய சிகிச்சைக்குப் பிறகு, பலத்த காயமடைந்த 9 பேரை மருத்துவா்கள் உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.