கந்தா்வகோட்டையில் மதிமுக கையொப்ப இயக்கம்
By DIN | Published On : 01st July 2023 11:23 PM | Last Updated : 01st July 2023 11:23 PM | அ+அ அ- |

தமிழக ஆளுநரை மாற்ற குடியரசுத் தலைவரை வலியுறுத்தி கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை மதிமுக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலா் மாத்தூா் கலியமூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்வை துணைப் பொதுச் செயலா் ரொஹையா சேக்முகமது தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை, திமுக வடக்கு ஒன்றியச் செயலா் மா. தமிழய்யா, மதிமுக ஒன்றியச் செயலா் வைர மூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் மதியழகன், கந்தா்வகோட்டை நகரச் செயலா் எம். ராஜா, முன்னாள் இளைஞரணி அமைப்பாளா் என். ஜானகிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Image Caption
படம். ஓயஓ