பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம்: மாணவிகளுக்குப் பாராட்டு
By DIN | Published On : 15th June 2023 09:38 PM | Last Updated : 15th June 2023 09:38 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியை சுசரிதா தலைமை வகித்தாா். கவிஞா் தங்கம் மூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்திப் பேசினாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகள் ச. ஆஷிகா பா்வீன், ச. சுபிக்ஷா, கா. மகதி ஸ்ரீ, ஐ. தேவதா்ஷினி , பொ. வைஷ்ணவி, கு. அருண் ஆகியோருக்கு பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அஞ்சலி தேவி தங்கம் மூா்த்தி ரொக்கப் பரிசுகள் மற்றும் புத்தகப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
முன்னதாக ஆசிரியை மு. கீதா வரவேற்றாா். ஆசிரியா் பரமசிவம் நன்றி கூறினாா்.