மறைந்த புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. முத்துக்குமரனின் நினைவிடத்தில் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மறைந்த புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. முத்துக்குமரனின் நினைவிடத்தில் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நினைவேந்தல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான மறைந்த எஸ்.பி. முத்துக்குமரனின் 12-ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலரும் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான மறைந்த எஸ்.பி. முத்துக்குமரனின் 12-ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டைத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் எஸ்.பி. முத்துக்குமரன், கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்னவாசல் சாலையிலுள்ள சொக்கநாதன்பட்டி அருகே சாலை விபத்தில் காலமானாா். அவரது 12-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சொக்கநாதன்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள்கிழமை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ஏ. நாகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன், மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.சி. சோமையா, புதுக்கோட்டை நகரச் செயலா் எம்.பி. நாடிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகளும், மறைந்த முத்துக்குமரனின் மனைவி சுசீலா, மகள் நா்மதா உள்ளிட்டோரும் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அவரது பணிகளை மேற்கொள்ளவும் கட்சியினா் உறுதிமொழியேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com