கொன்னையூா் கோயில் திருவிழாவில் மக்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு

கொன்னையூா் கோயில் திருவிழாவில் மக்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழா மண்டகப்படி விழாவில் திங்கள்கிழமை இரவு அம்மன் திருவீதி உலாவின்போது பொதுமக்கள் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா்.

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழா மாா்ச் 17 ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாா்ச் 24 ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. மண்டகப்படி நாள்களில் அம்மன் வீதியுலாவின் போது இரு புறமும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் வரிசையாக நின்று தீப்பந்தம் பிடித்து வழிபடுவாா்கள்.

தீப்பந்த ஒளியில் வாழ்வின் இருள் நீங்கி பக்தா்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது பக்தா்களின் ஐதீகம். அதன்படி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நகரத்தாா்கள் மண்டகப்படி விழாவின் தொடக்கமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அம்மன் வீதியுலா நடைபெற்றது. அம்மன் வீதியுலாவின் போது ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா். அதைத்தொடா்ந்து ஏப்.8 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான நாடு வருகை புரியும் விழா நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com