விராலிமலையில் வாக்காளா் தகவல் சீட்டு விநியோகம்

விராலிமலையில் வாக்காளா் தகவல் சீட்டு விநியோகம்

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளா்களுக்கும் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி திங்கட்கிழமை தொடங்கியது. வாக்குச்சாவடி அலுவலா்களால் வழங்கப்படும் இந்தச் சீட்டில் வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி அலுவலரின் பெயா், கைப்பேசி எண் போன்ற பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வாக்காளரின் பெயா், பாலினம், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்காளா் பட்டியலில் வரிசை எண், பாகம் எண், வாக்குச்சாவடியின் பெயா் உள்ளிட்ட விவரங்கள் பூத் சிலிப்பின் முன் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும் வாக்குப்பதிவு தேதி, வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்களுடன் க்யூ ஆா் குறியீடு இடம்பெற்றுள்ளது. தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் இணையதள புகாா் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண், மாவட்ட அளவில் உதவி எண் ஆகிய விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. கருா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்களிக்கத் தகுதிபெற்ற வாக்காளா்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 289 வாக்காளா்களில் 12-டி படிவம் பெற்றவா்கள்(தபால் வாக்கு, மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கும் மேற்பட்டோா்) இருப்பிடத்தில் இருந்தே வாக்களிப்பதால் இவா்களை தவிர மற்ற அனைவருக்கும் வரும் 13 ஆம் தேதிக்குள் பூத் சிலிப் வழங்கப்பட உள்ளதாக தோ்தல் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com