இலுப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பு.
இலுப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பு.

இலுப்பூரில் கொடி அணிவகுப்பு

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்களா்கள் பதற்றமின்றி வாக்களிக்க ஏதுவாக சிஆா்பிஎப் வீரா்கள் மற்றும் தமிழக போலீஸாா் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 6 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 31ம் தேதி ஏற்கெனவே அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா். இதைத்தொடா்ந்து, தமிழக காவல்துறையுடன் மத்திய சேமக் காவல் படை(சிஆா்பிஎப்) இணைந்து இலுப்பூரில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முரளிதரன், காவல் துணை கண்காணிப்பாளா் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு இலுப்பூா் அரசு மருத்துவமனையில் தொடங்கி வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் காவல் ஆய்வாளா்கள் தயாளன் (இலுப்பூா்), லதா (அன்னவாசல்), சிஆா்பிஎப் வீரா்கள் உள்பட நுற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com