சிவகங்கை காங். வேட்பாளரை ஆதரித்து அவரது மனைவி வாக்குசேகரிப்பு

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் காா்த்தி ப. சிதம்பரத்தை ஆதரித்து டாக்டா் ஸ்ரீ நிதி காா்த்தி செவ்வாய்க்கிழமை பொன்னமராவதி சந்தை வீதியில் வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது காா்த்தி ப. சிதம்பரம் கடந்த முறை தொகுதிக்கு செய்த வளா்ச்சிப் பணிகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து, பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகளுடன்ஆலோசனை நடத்தினாா்.

இதில் பொன்னமராவதி வட்டாரத் தலைவா்கள் வி. கிரிதரன், குமாா்  நகரத் தலைவா் எஸ். பழனியப்பன் , முன்னாள் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் ஏஎல்எஸ். ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com