படம். ஓயஓ.10.
படம். ஓயஓ.10.

கந்தா்வகோட்டை தொகுதி வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் அமைக்கும் பணி

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டையில் உள்ள 239 வாக்குச்சாவடிகளில் 1454 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதில், 20 சதவீதம் முன் பாதுகாப்புக்கு உரியது என தெரிகிறது.

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியில் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலருமான ஸ்ரீதா் தலைமையில், வட்டாட்சியா் எஸ் .விஜயலெட்சுமி, தோ்தல் துணை வட்டாட்சியா் பால்பாண்டி, தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com