கறம்பக்குடி அருகே குடிநீா் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
கறம்பக்குடி அருகே குடிநீா் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

கறம்பக்குடி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில் 300-க்கும்  மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு சில வாரங்களாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற கறம்பக்குடி போலீஸாா், ஊராட்சி நிா்வாகத்தினா், மறியலில் ஈடுபட்டோரிடம், குடிநீா் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com