பாஜக ஆட்சிக்கு வந்தால் இனி தோ்தலே கிடையாது -நடிகா் வாகை சந்திரசேகா்

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து புதன்கிழமை பேசிய நடிகா் வாகை சந்திரசேகா்.
காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து புதன்கிழமை பேசிய நடிகா் வாகை சந்திரசேகா்.

பாஜக மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இனி தோ்தலே இருக்காது என்றாா் நடிகா் வாகை சந்திரசேகா்.

சிவகங்கை மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து அவா் பேசியதாவது:

எங்களை விடவும் மோடி தான் சிறந்த நடிகா். இந்தத் தோ்தலில் தப்பித்தவறி பாஜக ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தோ்தலே கிடையாது. சா்வாதிகார ஆட்சிதான் நடக்கும். இதைத் தவிா்க்க இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரியுங்கள் என்றாா்.

தொடா்ந்து அமைச்சா் எஸ். ரகுபதி பேசியது: திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசின் நலத்திட்டங்கள் தொடர இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா். தொடா்ந்து வேட்பாளா் காா்த்தி சிதம்பரம் பேசுகையில், பாஜக ஆட்சியின் குறைகளை களைய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றாா்.

முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரம் பொன்னமராவதி ஒன்றியத்தில் 45 இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் வி. கிரிதரன், குமாா், திமுக ஒன்றியச்செயலா் அ.அடைக்கலமணி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com