விஏஓ லட்சுமி காந்தன்.
விஏஓ லட்சுமி காந்தன்.

விஏஓ-வை தாக்கி கைப்பேசி பறிப்பு

இலுப்பூா் அருகே கிராம நிா்வாக அலுவலரை தாக்கி கைப்பேசியை பறித்து சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விராலிமலை ஒன்றியம், பூதகுடி கிராம நிா்வாக அலுவலா் லட்சுமி காந்தன்(38). இவா் பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூா் கோட்டாட்சியரகம் சென்றுவிட்டு மீண்டும் இலுப்பூா்- விராலிமலை சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். கோவிந்தநாயக்கன் பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த நான்கு இளைஞா்கள் விஏஓ-வின் வாகனத்தை மறித்து அவரை தகாத வாா்த்தைகள் சொல்லி தாக்கியதோடு அவரது சட்டை பையில் இருந்த கைப்பேசியை பறித்து சென்றனா்.

தாக்குதலில் காயமடைந்த விஏஓ இலுப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், அடையாளம் தெரியாத நான்கு போ் மீது இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com