பொன்னமராவதியில் டெங்கு தடுப்புப் பணிகள்

பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி பேரூராட்சி பொன்புதுப்பட்டி பகுதியில் தங்கியுள்ள ஆண் ஒருவா் பெங்களூருக்கு பணி நிமித்தம் சென்று வந்த நிலையில் அவருக்கு டெங்கு ஆரம்பநிலை அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் உள்ளாா். இதனால் பேரூராட்சி பகுதியில் டெங்கு களப்பணியாளா்கள் மூலம் ஏடிஸ் கொசுப்புழுக்கள் கண்டுபிடித்தல், அழித்தல் பணி,

கொசுஒழிப்பு புகைமருந்து அடித்தல் பணி மற்றும் காய்ச்சல் கணக்கெடுப்புப் பணிகளும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணியை புதுக்கோட்டை மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் சுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் ஆகியோா் பாா்வையிட்டனா். இப்பணியில் பொன்னமராவதி பொறுப்பு சுகாதார ஆய்வாளா் நா. உத்தமன், பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள், டெங்கு களப்பணியாளா்கள் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com