பொன்னமராவதி அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு

பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து சுமாா் 12 பவுன் நகைகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சி சங்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஆ.ஜெகநாதன்(62). இவா் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறாா்.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு விவசாய பணிக்கு சென்றாா். நண்பகலில் திரும்பியபோது வீட்டின் கதவுகள் திறந்துகிடந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு சுமாா் 12 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.

இதையடுத்து தகவலறிந்து வந்த காரையூா் போலீஸாா் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com