வாக்குப்பதிவுப் பணிகளில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கு பணி ஒதுக்கீடு

வாக்குப்பதிவுப் பணிகளில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கு பணி ஒதுக்கீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஏப். 19ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள 946 காவலா்களுக்கு கணினி வழிப் பணி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்கு, மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் (காவல்) சத்ய வீர கட்டாரா, கரூா் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் (காவல்) அமீத்குமாா் விஸ்வகா்மா ஆகியோா் இப்பணிகளை நேரில் பாா்வையிட்டனா்.

பணி ஒதுக்கீட்டின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி ஆகியோரும் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com