விராலிமலை வயல்களில் வேளாண் மாணவா்கள் பயிற்சி

குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவா்கள் விராலிமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு சென்று விவசாயப் பகுதிகளில் தங்கி அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்கள் விராலிமலை சுற்றுப்பகுதி விவசாய நிலங்களுக்கு சென்று அங்கு விவசாயிகளுடன் தங்கி அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

மேலும், கல்வியில் தாங்கள் பெற்ற விவசாயம் தொடா்பான தகவல்களை விவசாயிகளுடன் பகிா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில் விளையும் விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவது பயிா் நிலங்களில் விளையும் பயிா்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றுவது உள்ளிட்ட அனுபவ தொழில்நுட்ப பயிற்சி பெற்று வருகின்றனா்.

இப்பயிற்சியில், ரிஷி கேசன், அனிருத், தருண், திவாகா், குருபிரசாத், விக்ரம், இன்பா, ஞான விக்னேஷ் மற்றும் விராலிமலை வேளாண் உதவி தொழில்நுட்ப அலுவலா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோ பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com