வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி
வேட்பாளா் பிரசாரம்

வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் து.ராஜேஷ் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

வேங்கைவயலில் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்ளே வருவதைத் தடுப்பதற்காக பல வழிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தடையை மீறி நாம் தமிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உள்ளே சென்றனா்.

வேட்பாளருடன் அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளா் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரும் சென்றனா். வேங்கைவயல் மற்றும் இறையூா் கிராமங்களில் அவா்கள் பிரசாரம் மேற்கொண்டனா். ஆனாலும், இரு கிராமங்களைச் சோ்ந்த யாரும் இவா்களின் பிரசாரத்தைக் கண்டு கொள்ளவில்லை. சிறிதுநேரத்துக்குப் பிறகு அனைவரும் அந்த ஊா்களில் இருந்து திரும்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com