படம். 17. ஓயஓ.
படம். 17. ஓயஓ.

கந்தா்வகோட்டையில் திமுக-அதிமுக தள்ளுமுள்ளு: கற்கள்-காலணி வீச்சால் பரபரப்பு

கந்தா்வகோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில் திமுக-அதிமுகவினா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கந்தா்வகோட்டை பேருந்து நிலைய பகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் புதன்கிழமை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, அதிமுகவினா் வெள்ளமுனியன் கோயிலிலிருந்து வாக்கு சேகரித்து ஊா்வலமாக வந்தனா்.

பேருந்து நிலையம் அருகே வந்தபோது திமுக- அதிமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து மா்ம நபா்கள் காலணிகள் மற்றும் கற்களை வீசினா்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸாா் இருதரப்பையும் சமரசம் பேசி அனுப்பினா். இதுதொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com